இரண்டாவது போட்டியிலும் ஆஸி.வென்றது
அவுஸ்திரேலிய – – இந்திய அணிகள் மோதிக் கொண்ட இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா நிர்ணயித்த 309 என்ற வெற்றி இலக்கை 7 விக்கெட்டுக்கள் மீதம் வைத்து இலக்கை அடைந்து அவுஸ்திரேலியா இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்றது.
இந்திய அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று பிரிஸ்பேனில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி இந்தியாவின் ரோஹித் சர்மாவும், ஷிகார் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.
இந்த போட்டியிலும் தவான் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்திய அணி 9 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.
அவரை தொடர்ந்து விராட் கோஹ்லி களமிறங்கினார். ரோஹித் சர்மாவும், கோஹ்லியும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் இந்திய அணியின் ஓட்ட விகிதம் சீராக உயர்ந்தது.
ரோஹித் 61 பந்துகளிலும், கோஹ்லி 60 பந்துகளிலும் அரைச்சதம் பெற்றனர்.
விராட் கோஹ்லி 59 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து ரோஹித் சர்மாவுடன் ரஹானே ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோஹித் சர்மா 111 பந்துகளில் சதம் விளாசினார்.
இதனையடுத்து இந்திய அணி 255 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ரோஹித் சர்மா 124 ஓட்டங்களுடன் ரன் அவுட் முறையில் வெளியேறினார்.
அவரை தொடர்ந்து தோனி 11 ஓட்டங்களுடனும், ரஹானே கடைசி வரை போராடி 89 ஓட்டங்களை எடுத்தும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 308 ஓட்டங்களை எடுத்தது.
இதனையடுத்து அவுஸ்திரேலிய அணிக்கு 309 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் 309 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலியா களம் இறங்கியது. இந்திய வீரர்கள் சில பிடிகளை தவறவிட்டதால் தொடக்க வீரர்கள் பிஞ்ச் மற்றும் ஹோன் மார்ஷ் ஆகியோர் தலா 71 ஓட்டங்களை பெற்றனர்.
அடுத்து வந்த ஸ்மித் 46 ஓட்டங்களைப் பெற்று போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். 4ஆவது வீரராக களம் இறங்கிய பெய்லி சிறப்பாக விளையாடி அவுஸ்திரேலிய அணியை வெற்றி பெற வைத்தார். இவரது ஆட்டத்தால் அந்த அணி 49 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 309 ஓட்டங்களைப் பெற்று 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெய்லி 76 ஓட்டங்களையும், மேக்ஸ்வெல் 26 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
