சேதுபதியின் பொங்கள் பரிசு!

நக்கீரன்  நக்கீரன்
சேதுபதியின் பொங்கள் பரிசு!

சேதுபதியின் பொங்கள் பரிசு!

நானும் ரௌடி தான் வெற்றியை தொடர்ந்து அருண்குமார் இயக்கத்தில் ‘சேதுபதி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. மிகப்பெரிய வெற்றி படமான பீட்சா படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்த ரம்யா நம்பீசன் இந்த படத்திலும் நாயகியாக இணைகிறார். முதன் முதலாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் இந்த படத்தில் விஜய் சேதுபதி. சேதுபதி படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தது. 


இந்நிலையில் இப்படத்திற்கான டீஸர் பொங்கல் அன்று வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். வாசன் மூவிஸ் தயாரித்து இருக்கு இந்த படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைத்துள்ளார். விஜய்சேதுபதி முதலி முறையாக போலீஸ் வேடத்தில் நடிப்பதனால் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு கிட்டியுள்ளது.

இந்த படத்தை முன்னணி விநியோகஸ்தர் நிறுவனமான ஜீயஸ் பொழுதுபோக்கு குழுமம் இந்த படத்தை (மலேஷியா, வளைகுடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரிட்டன், ஐரோப்பா, அமெரிக்கா, கனடா) போன்ற வெளியீடு செய்வதற்கு வெளிநாடு உரிமைகளை வழங்கியுள்ளது. 

மூலக்கதை