ரஜினி முருகன் திரைவிமர்சனம்

கதிரவன்  கதிரவன்
ரஜினி முருகன் திரைவிமர்சனம்

விஜய், அஜித்திற்கு பிறகு உண்மையாகவே விநியோகஸ்தரின் செல்லப்பிள்ளையாக இருப்பவர் சிவகார்த்திகேயன். காக்கிசட்டை வெற்றிக்கு பிறகு பல தேதிகள் மாற்றி எப்படியோ ரஜினி முருகன் இன்று திரைக்கு வந்து விட்டது.வருத்தப்படாத வாலிபர் சங்க கூட்டணி பொன்ராம், சிவகார்த்திகேயன், சூரி, டி.இமான் மீண்டும் இணைய இப்படத்திற்கு பூஜை போட்ட அன்றே எதிர்ப்பார்ப்பு எகிறிவிட்டது.

இதை தொடர்ந்து ஒரு வழியாக பொங்கல் திருநாளில் மேலும் திருவிழா கோலம் ஆக்க, ரஜினி முருகன் உலகம் முழுவதும் இன்று 800 திரையரங்குகளில் வெளிவந்துள்ளது.கதைக்களம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஸ்டைலில் சிவகார்த்திகேயன்+சூரி கூட்டணி வேலைக்கே போகாமல் கலாட்டா செய்து வருகின்றனர் ஊருக்குள். ஒரு கட்டத்தில் கீர்த்தி சுரேஷை சிவகார்த்திகேயன் யதார்த்தமாக பார்க்க வழக்கம் போல் பார்த்தவுடன் காதல்.ஆனால் கீர்த்தி சுரேஷ் அப்பாவிற்கு சிவகார்த்திகேயனை பார்த்தாலே பிடிக்கவில்லை.

ஏனென்றால் சிவகார்த்திகேயன் அப்பாவும் கீர்த்தி சுரேஷ் அப்பாவும் இளம் வயதில் நண்பர்களாக இருந்து ஒரு சண்டையால் பிரிந்தவர்கள்.பின் கீர்த்தியை காதலிக்க அவர் வீட்டு முன்பே டீக்கடை போடுகிறார் சிவகார்த்திகேயன்.கீர்த்தி அப்பாவின் பேச்சை கேட்டு சிவகார்த்திகேயனை காதலிக்க மறுக்கிறார்.

பிறகு டீக்கடையை காலி செய்து ரியல் எஸ்டேட்டில் நல்ல பணம் வரும் என்று தன் தாத்தா ராஜ்கிரணிடம் பணம் வாங்கி ரியல் எஸ்டேட் ஆரம்பிக்க, அதே ஊரில் பணக்காரர்களை டார்க்கெட் செய்து பணம் பிடுங்கும் சமுத்திரகனி சிவகார்த்திகேயனிடம் பணம் கேட்டு மிரட்ட, சிவகார்த்திகேயன் அதை கொடுக்க மறுக்கிறார்.இதன் பின் ஒரு சில இடங்களில் இவர்களுக்குள் மோதல் ஏற்பட சமுத்திரகனி, சிவகார்த்திகேயன் குடும்பத்தையே அழிக்க முயற்சி செய்கிறார்.

இதன் பின் ஒரு சில இடங்களில் இவர்களுக்குள் மோதல் ஏற்பட சிவகார்த்திகேயன் தன் வீட்டை விற்க முயற்சி செய்ய அந்த வீட்டில் எனக்கும் பங்கு இருக்கு என்று சமுத்திரகனி வந்து நிற்கிறார். அந்த வீட்டை விற்றால் தான் சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் செட்டில் ஆகமுடியும். அந்த வீட்டை சிவகார்த்திகேயன் விற்றாரா, சமுத்திரகனியின் சதி செயலை முறியடித்தாரா என்று கலகலப்பாக கமர்ஷியலாக கூறியிருக்கிறார் பொன்ராம், படத்தை பற்றிய அலசல்சிவகார்த்திகேயன் மான்கராத்தே, காக்கிசட்டையில் அதிரடியில் கலக்கியிருந்தாலும், தன் பேவரட் குடும்ப ரசிகர்களை கொஞ்சம் ஏமாற்றினார்.

ஆனால், இதையெல்லாம் சேர்த்து வைத்தார் போல் ரஜினி முருகனில் காமெடி, செண்டிமெண்ட், ஆடல், பாடல் என அதகளம் செய்துள்ளார். கொஞ்சம் லிட்டில் இளைய தளபதி போலவே தெரிகின்றது.நடித்த ஒரு படம் தான் வந்துள்ளது, ஆனால், அடுத்தடுத்து கையில் அரை டஜன் படங்களை வைத்திருக்கும் கீர்த்தி சுரேஷிற்கு இப்படம் தான் தமிழ் சினிமாவின் பிள்ளையார் சுழி என்று கூட சொல்லலாம். சிவகார்த்திகேயனுக்கு கவுண்டர் கொடுப்பது, பாடல் காட்சியில் குட்டி குட்டி எக்ஸ்பிரஷன் என ரசிகர்களை கவர்ந்து இழுக்கின்றார்.

தமிழ் சினிமாவிற்கு இன்னும் 10 வருடம் ஆள ஒரு தரமான கதாநாயகி கிடைத்து விட்டார்.சூரி நீண்ட இடைவேளைக்கு பிறகு தன் பேவரட் கூட்டணியுடன் இணைந்துள்ளார். சிவாக்கு போட்டியாக கவுண்டர் கொடுத்து கலகலப்பாக்குகிறார். அதிலும் சிவா காதலுக்கு பாடல் போடுவது, அதற்காக கீர்த்தியின் அப்பாவிடம் அடிவாங்கும் இடம் தான் கலகலப்பின் உச்சக்கட்டம், தீவிர ரஜினி ரசிகராக கீர்த்தியின் அப்பா மேனரிசம், ரஜினி பாணியில் மகளுக்கு அட்வைஸ் செய்வது என அட்டகாசம் செய்கிறார்.ராஜ்கிரண் இனி தான் அவர் நல்ல நடிகர் என்று நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

சிவகார்த்திகேயனுக்கு தாத்தாவாக எப்போதும் போல் ஸ்கோர் செய்கிறார். அதிலும் இறந்தது போல் நடிக்கும் இடத்தில் சிரிக்க வைத்து, வெளிநாட்டில் இருக்கும் தன் பிள்ளைகளை பார்த்து என் தலைமுறைக்கு தமிழே கற்றுக்கொடுக்கல, நீங்க என்னைய பற்றிய சொல்லியிருப்பீங்க என்று சொல்லும் இடத்திலும் செண்டிமெண்டில் ராஜ்கிரண் இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு செம்ம போட்டி தான்.சமுத்திரகனி கதாபாத்திரத்தில் தான் ஒரு அழுத்தமே இல்லை.

டி.இமான் இசையில் என்னம்மா இப்படி பண்றீங்களேமா….உன் மேல கண்ணு பாடல்கள் ரசிக்க வைக்க, பின்னணி இசையில் மதுரைக்கே ஏற்ற போக்கில் கலக்கியுள்ளார்.க்ளாப்ஸ்சிவகார்த்திகேயன் டைமிங் காமெடி, செண்டிமெண்ட், சின்ன ஆக்‌ஷன் என முழு கமர்ஷியல் ஹீரோவாகிவிட்டார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சூரி காமெடி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கு. அதிலும் குறிப்பாக பஞ்சாயத்து காட்சி காமெடி கலக்கல்.2:30 மணி நேரம் படம் என்றாலும் எந்த காட்சியும் போர் அடிக்காமல் திரைக்கதை அமைத்திருக்கிறார் பொன்ராம்.

அதிலும் பொங்கலுக்கு ஏற்ற கமர்ஷியல் விருந்தாக வந்துள்ளது.பல்ப்ஸ்சமுத்திரகனி வில்லன் கதாபாத்திரத்தில் ஒரு அழுத்தம் இல்லாமல் உள்ளது. ஏதோ நானும் வில்லன் என்று ஏதோ செய்கிறார். வழக்கமான கமர்ஷியல் பார்முலா பார்த்து பழகிய கதை.மொத்தத்தில் ரஜினிமுருகன் நம்பி வாங்க 2:30 மணி நேரம் சந்தோசமா இருந்துட்டு போங்க!

ரேட்டிங் 3/5 2016-01-14

மூலக்கதை