விஜய் அடுத்த படம்! ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

நக்கீரன்  நக்கீரன்
விஜய் அடுத்த படம்! ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

விஜய் அடுத்த படம்! ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

ட்லி இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் தெறி திரைப்படத்தின் FIRST LOOK வெளியாகி திரையுலகத்திலும், ரசிகர்களிடையேயும் மகிழ்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. அதே சமயம் விஜய்யின் அடுத்த படத்தின் ஹீரோயின் பற்றிய தகவலும் வெளியாக ரசிகர்கள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுவிட்டனர். ஆனால் அது வதந்தி என தெரியவந்ததும் தற்போது கடுப்பில் இருக்கிறார்கள்.


தெறி திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் ’அழகிய தமிழ்மகன்’ திரைப்பட இயக்குனர் பரதன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமரகாவியம், நேற்று இன்று நாளை படங்களில் நடித்த மியா ஜார்ஜ் நடிப்பதாக அவரது ட்விட்டர் அக்கவுண்டில் அறிவிப்பு வெளியானது. இதனைக் கண்டவுடன் விஜய் ரசிகர்கள் இந்த தகவலைப் பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை தெரிவிக்க, ஃபேஸ்புக் மூலம் அவர்களது மகிழ்ச்சியை தகர்த்துவிட்டார் மியா ஜார்ஜ். 

‘எனக்கு ஃபேஸ்புக்கில் மட்டும் தான் அக்கவுண்ட் இருக்கிறது. ட்விட்டரில் என் பெயரில் இயங்கும் அக்கவுண்டுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை” என்று கூறிவிட்டார். அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத திரையுலக நட்சத்திரங்களின் சமூக வலைதள அக்கவுண்டில் இருந்து வெளியாகும் தகவல்களை நம்பி ரசிகர்கள் ஏமாறுவது தொடர்ந்து நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.


மூலக்கதை