6 ஆயிரம் கோடிகளை அள்ளிய ஸ்டார் வார்ஸ்-7

நக்கீரன்  நக்கீரன்
6 ஆயிரம் கோடிகளை அள்ளிய ஸ்டார் வார்ஸ்7

6 ஆயிரம் கோடிகளை அள்ளிய ஸ்டார் வார்ஸ்-7

ந்திய அளவில் 600 கோடி வசூல் செய்த பாகுபலியின் சாதனை நாம் போற்றும் நேரத்தில் உலக அளவில் “ஸ்டார் வார்ஸ்-7” படத்தின் சாதனையை பார்த்தால் தலையே சுற்றி விடுகிறது. இந்திய மதிப்பில் ரூ.1300 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டு 20 நாட்களில் ரூ. 6000 கோடிகளை வசூல் செய்து பல ரெக்கார்டுகளை நாளுக்கு நாள் உடைத்து எறிந்து வருகிறது ஸ்டார் வார்ஸ்-7.


உலகளவில் இதுவரைக்கும் 1.5 பில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. அவதார் படம் மொத்தமாக 2.6 பில்லியன் டாலர் வசூல் சாதனையை புரிந்து முதல் இடத்தில் உள்ளது. ஸ்டார் வார்ஸ் செல்லும் வேகத்தைப் பார்த்தால் இது நிச்சயம் அதைவிட புதிய இலக்கை எட்டும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 88 மில்லியன் டாலர்களை வாரிக்குவித்து உள்ளது ஸ்டார் வார்ஸ் திரைப்படம். இரண்டாவது இடத்தில் ”டேடி’ஸ் ஹோம்” படம் தனது இரண்டாவது வாரத்தில் 29 மில்லியன் டாலர்கள் வசூலையும், மூன்றாவது இடத்தில் குவென்டின் டரன்டினோவின் “த ஹேட்புல் 8” திரைப்படம் 16 மில்லியன் டாலர்கள் வசூல் செய்துள்ளது.

மூலக்கதை