7ஆவது தடவையாக தெற்காசியாவின் சம்பியனானது இந்தியா : அடுத்த தொடர் பங்களாதேஷில்
இந்த சம்பியன் பட்டத்துடன் 7ஆவது முறையாக இந்தியா சம்பியனாகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை 12 ஆவது தெற்காசியக் கால்பந்து சம்பியன்ஷிப் தொடரை நடத் தும் வாய்ப்பு பங்களாதேஷிற்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டாம் திகதி நடைபெற்ற சாவ் நிர்வாகக் குழு கூட்டத்திலேயே இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.
சாவ் தலைவரான காசி சலாவூதீன் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளாததினால், பிரதி தலைவராக செயற்பட்ட இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய ஊடக மற்றும் தொடர்பாடல் அதிகாரியுமான ரஞ்சித் ரொட்ரிகோ கூட்டத்தை வழிநடத்தினார்.
இதில் பல தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன. அதன்படி மகளிருக்கான தெற்காசியக் கால்பந்து சம்பியன்ஷிப் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறவிருக்கிறது. அத்தோடு 2017ஆம் ஆண்டுக்கான தெற்காசிய கால்பந்து போட்டிகளை பங்களாதேஷ் நடத்துகிறது.
அதேவேளை நடைபெற்றுமுடிந்த தெற்காசியகால்பந்து சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் பிரதம விருந்தினராகவும் ரஞ்சித் ரொட்ரிகோ கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
2016-01-05



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
