இங்கிலாந்து கவுண்டி அணி வீரர் மெத்தியூ திடீர் மரணம்
இங்கிலாந்து சசெக்ஸ் கவுண்டி அணியின் வேகப்பந்து வீச்சாளர் மெத்தியூ ஹொப்டனின் திடீர் மரணம் இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தை கவலைக்குள்ளாக்கியுள்ளது.
சகெக்ஸ் அணியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல்தர போட்டியில் அறிமுகமான மெத்தியூ ஹொப்டன், அந்த அணிக்காக நடைபெற்ற 3 வகையான போட்டிகளிலும் 48 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
வேகப்பந்து வீச்சில் சிறந்து விளங்கிய மெத்தியூ ஹொப்டன் தனது 22 வயதில் திடீரென மரணமடைந்துள்ளார்.
இவரது மரணம் குறித்து சசெக்ஸ் ஹவுண்டி அணி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஹொப்டனின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளோம். அவரை இழந்து வாடும் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹொப்டன் எவ்வாறு மரணம் அடைந்தார் என்பதற்கான விளக்கம் அளிக்கப்படவில்லை.
இவரது மணரத்திற்கு சக விளையாட்டு வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2016-01-04



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
