அமெரிக்கா ஜனாதிபதி பரக் ஒபாமாவின் நாய்களை கடத்த முயற்சி

கதிரவன்  கதிரவன்
அமெரிக்கா ஜனாதிபதி பரக் ஒபாமாவின் நாய்களை கடத்த முயற்சி

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோன் எப். கெனடின் மற்றும் நடிகை மர்லின் மன்றோ ஆகியோரின் புதல்வன் ஸ்காட் ஸ்டோக்கர்ட் அமெரிக்கா ஜனாதிபதி பரக் ஒபாமாவின்  செல்ல பிராணியான, இரண்டு நாய்களை கடத்த முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரின் வாகனத்தில் இரண்டு துப்பாக்கி மற்றும் கூரிய ஆயுதம் ஒன்றையும் பதுக்கி வைத்திருந்ததை வொஷிங்டன் காவற்துறையினர் கைப்பற்றி உள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் தாம் எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிட போவதாகவும் ஸ்காட் ஸ்டோக்கர்ட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் குற்றவாளி சட்டத்தை  மீறியமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2016-01-09

மூலக்கதை