மீண்டும் சிக்கினார் போதைப் பொருட்களின் கடவுள்

கதிரவன்  கதிரவன்
மீண்டும் சிக்கினார் போதைப் பொருட்களின் கடவுள்

போதைப் பொருட்களின் கடவுள் என்று வர்ணிக்கப்படுகிற போதைப்பொருள் கடத்தல் குழுவின் தலைவர் எல் சாபோ குஷ்மான் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மெக்சிகோ சிறையில் இருந்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் தப்பிச் சென்ற குஷ்மான் சர்வதேச அளவில் மிகப்பாரிய அளவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த ஆவார்.

ஆறு மாதங்களுக்கு முன்னர் குறித்த சிறையில் இருந்து ஒன்றரை கிலோமீற்றர் தூரத்துக்கு நீண்டசுரங்கப்பாதை ஒன்றை அமைத்து, அவரது உதவியாளர்களால் குஸ்மான் சிறையில் இருந்து தப்பிக்கச் செய்யப்பட்டார்.

எனினும் தற்போது மீண்டும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, அந்த நாட்டின் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு மெக்சிகோவின் பிரதான சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கே மீண்டும் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2016-01-09

மூலக்கதை