சிரியாவில் பட்டினியால் 23 பேர் உயிரிழப்பு – 40 ஆயிரம் பேருக்கு உயிர்காக்கும் உதவிகள் தேவை

கதிரவன்  கதிரவன்
சிரியாவில் பட்டினியால் 23 பேர் உயிரிழப்பு – 40 ஆயிரம் பேருக்கு உயிர்காக்கும் உதவிகள் தேவை

உள்நாட்டு போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் 23 பேர் பட்டினியால் உயிரிழந்துவிட்டதாக எல்லைகளற்ற மருத்துவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

சிரிய அரசு ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள மதாயா பகுதியில் கடந்த டிசம்பர் 1-ம் தேதியில் இருந்து இதுவரை 23 பேர் உணவு கிடைக்காமல் பட்டினியால் உயிரிழந்துள்ளதாக எல்லைகளற்ற மருத்துவர் அமைப்பு தெரிவித்துள்ளது. போர் காரணமாக பொது மக்கள் குறிப்பிட்ட இடத்திற்குள்ள வலுகட்டாயமாக வசிக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இதனால் உணவு போன்ற அடிப்படை தேவைகள் கிடைக்கவில்லை. அதுவும் மதாயா பகுதியில் கோரமான சூழ்நிலை நிலவுகிறது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ஐ.நா. வெளியிட்டுள்ள அறிகையில், மதாயா பகுதியில் சுமார் 40 ஆயிரம் பேருக்கு உயிர்காக்கும் உதவிகள் தேவைப்படுகிறது, இவர்களில் பாதி பேர் குழந்தைகள் என்று கூறப்பட்டுள்ளது.

2016-01-09

மூலக்கதை