லிபியா போலீஸ் பயிற்சி மையத்தின் மீது டிரக் குண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு – 200 பேர் படுகாயம்

கதிரவன்  கதிரவன்
லிபியா போலீஸ் பயிற்சி மையத்தின் மீது டிரக் குண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு – 200 பேர் படுகாயம்

மேற்கு லிபியாவில் போலீஸ் பயிற்சி முகாமில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்ற போலீஸ் பயிற்சி மையத்தில் 400-க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வந்தனர். இவர்களில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டதாக லிபியா செய்தி நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 200 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலை அடுத்து லிபியாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. லிபியாவிற்கான ஐ.நா தூதர் மார்டின் கோப்லர் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தீவிரவாதத்திற்கு எதிராக லிபிய மக்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் இந்த கொடூர தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

2016-01-08

மூலக்கதை