அமெரிக்காவில் புத்தாண்டு தினத்தில் சீக்கியர் படுகொலை: குற்றவாளிபற்றி துப்பு தந்தால் ரூ.6¾ லட்சம் – போலீஸ் அறிவிப்பு

கதிரவன்  கதிரவன்
அமெரிக்காவில் புத்தாண்டு தினத்தில் சீக்கியர் படுகொலை: குற்றவாளிபற்றி துப்பு தந்தால் ரூ.6¾ லட்சம் – போலீஸ் அறிவிப்பு

அமெரிக்காவில் பிரஸ்னோ நகரில் வசித்து வந்தவர் குர்சரண்சிங் கில் (வயது 68). சீக்கியர். அங்குள்ள மதுபான கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்த இவர், புத்தாண்டு தினத்தன்று 16-18 வயதுக்குட்பட்ட ஒருவரால் பட்டப்பகலில் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

அமெரிக்காவில் 30 வருடங்களாக வசித்து வந்த கில்லின் படுகொலை அங்குள்ள சீக்கிய சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த கொலையில் இதுவரை துப்பு துலங்கவில்லை. இனவெறியில் அவர் கொல்லப்பட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலையில், கில் கொலையில் குற்றவாளி பற்றி சரியான துப்பு தருகிறவர்களுக்கு 10 ஆயிரம் டாலர் ரொக்கப்பரிசு (ரூ.6¾ லட்சம்) வழங்கப்படும் என பிரஸ்னோ போலீஸ் அதிகாரி ஜெர்ரி டையர் அறிவித்துள்ளார்.

2016-01-08

மூலக்கதை