மேற்குல நாடுகளுக்கு எதிரான நாசகார தாக்குதல்களுக்காக சாரதியற்ற வாகனங்களை உருவாக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் (PHOTOS)
மேற்குலக நாடுகளில் தாக்குதல்களை நடத்தும் முகமாக ஐ.எஸ். தீவிரவாதிகள் சாரதி இல்லாமல் செலுத்தப்படக் கூடிய வாகனங்களை உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐ.எஸ். தீவிரவாதிகள் ஐரோப்பாவில் படுகொலைத் தாக்குதல்களை முன்னெடுக்கும் முகமாக விஞ்ஞானிகளையும் ஏவுகணை நிபுணர்களையும் பணிக்கு நியமித்துள்ளனர்.
சிரிய ரக்கா நகரிலுள்ள ஜிஹாதி பல்கலைக்கழகத்தில் தூர இருந்து இயக்கும் முறைமை மூலம் செயற்படும் பாரிய நாசத்தை விளைவிக்கும் நகரும் குண்டுகளாகப் பயன்படுத்தக் கூடிய வாகனங்களை உருவாக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த சாரதியற்ற கார்களை உருவாக்குவதை வெளிப்படுத்தும் காணொளிக் காட்சிகளானது ஐரோப்பிய நாடுகளிலுள்ள தீவிரவாதிகளின் முகாம்களுக்கு கடத்தப்பட்ட பின்னர், அவற்றிலுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அவர்களும் தமக்கென சொந்தக் கார் குண்டுகளை தயாரிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
ஐ.எஸ். தீவிரவாதிகளின் பயிற்சி போதனைகளை வெளிப்படுத்தும் 8 மணி நேர காணொளிக் காட்சிகளில் தீவிரவாதிகளின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவால் தயாரிக்கப்பட்ட தாக்குதல் சாதனங்கள் காண்பிக்கப்பட்டன.
அத்துடன் தீவிரவாதிகள் பயணிகள் ஜெட் விமானங்களைத் தாக்கக் கூடிய புதிய தொழில்நுட்பங்களையும் விருத்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்படி காணொளிக் காட்சியில் சாரதியற்று செலுத்தப்படக் கூடிய கார் உரிய இலக்கை நோக்கிச் சென்று எவ்வாறு பாரிய சேதத்தை விளைவிக்கும் என்பது உயர் தராதரத்துடன் படமாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய இராணுவத்தின் ஆலோசகர்களில் ஒருவரான மேஜர் கிறிஸ் ஹன்டர் தெரிவித்துள்ளார்.
இந்தக் காணொளிக் காட்சி பெரிதும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளதாக அவர் கூறி னார். மேலும் அந்தக் காணொளிக் காட்சியில் ஐ.எஸ். தீவிரவாத குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தரையிலிருந்து வானுக்கு சென்று தாக்கும் ஏவுகணைகளுக்கான பற்றறிகளை தயாரிப்பதுவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
2016-01-07



காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
