டெஸ்ட் கிரிக்கட் போட்டிகள் வளர்ச்சியடைய வீரர்களுக்கு அதிக சம்பளம் அவசியம்: பீட்டர்சன்

  4 TAMIL MEDIA

Sunday, 03 January 2016 09:48

கிரிக்கெட்டில் டெஸ்ட் மேட்ச் வளர்ச்சியடைய வேண்டுமானால் வீரர்களுக்கு அதிக சம்பளம் தர வேண்டும் என்று இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் பீட்டர் சன் கூறியுள்ளார்.

இருபது ஓவர் கிரிக்கெட்போட்டிகள், தனியார் நடத்தும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் குறித்து கூறியுள்ளார் பீட்டர் சன். அப்போது வீரர்கள் அதிக சம்பளம் கிடைப்பதால்தான் 20 ஓவர் விளையாட்டுப் போட்டிகளில் விளையாட அதிக
ஆர்வம் காண்பிக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

இதே போன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கும் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும் என்றும், அப்போதுதான் வீரர்கள் உற்ச்சாகத்துடன் போட்டிகளில் விளையாடுவார்கள் என்றும், புதிய வீரர்களும்
டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆர்வம் காட்டுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

மூலக்கதை