இலங்கைக் கிரிக்கட் நிறுவனத் தலைவராக திலங்க சுமதிபால தேர்வு!
Sunday, 03 January 2016 08:39
இலங்கைக் கிரிக்கட் நிறுவனத்தின் புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதிச் சபாநாயகருமான திலங்க சுமதிபால தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைக் கிரிக்கட் நிறுவனத்தின் நிர்வாகிகளைத் தெரிவு செய்யும் தேர்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இதன்போதே, திலங்க சுமதிபால தலைவராகவும், உப தலைவர்களாக ஜெயந்த தர்மதாச மற்றும் கே.மதிவாணன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு, புதிய செயலாளராக மொஹான் டி சில்வாவும், உதவிச் செயலாளராக ரவீன் விக்ரமரத்னவும், பொருளாளராக ஷாமினி சில்வாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும், அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களுள் ஒருவருமான அர்ஜூன ரணதுங்க உப தலைவர் பதவிக்கு போட்டியிட்ட போதிலும் தோல்வியடைந்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
