வாலிபரை உயிருடன் கடித்து தின்றது புலி: உயிரியல் பூங்காவில் விபரீதம்
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் வனவிலங்கு உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்கா 150 ஆண்டுக்கு மேல் பழமையானது. இங்கு பல அரிய உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இங்குள்ள கூண்டில் 3 சைபீரிய புலிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. பூங்கா ஊழியர் ஒருவர் நேற்று காலை புலிக்கு இறைச்சி போட சென்ற போது, அங்கு வாலிபர் ஒருவர் உடல் துண்டு துண்டாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். பொலிசார் விரைந்து வந்து வாலிபரை சிதைந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.
இதுகுறித்து பொலிஸ் செய்தித் தொடர்பாளர் லார்ஸ் போர்க் கூறியதாவது, புலிகள் பராமரிக்கப்படும் இடத்தின் சுற்றுச்சுவரை தாண்டி வாலிபர் எப்படி உள்ளே சென்றார் என்பது தெரியவில்லை.
வாலிபருக்கு 21 வயது இருக்கும். அவருடைய குரல்வளை, தொடை, முகம் போன்ற பகுதிகளில் புலிகள் கடித்து குதறியுள்ளன. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் புலி கூண்டுக்குள் சென்று விட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம்.
வனவிலங்கு பூங்காவில் உள்ள எல்லா கமெராக்களிலும் பதிவான காட்சிகளை ஆராய்ந்து வருகிறோம். பலியான வாலிபர் வெளிநாட்டை சேர்ந்தவர். டென்மார்க் குடியுரிமை பெற்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. வாலிபரை புலிகள் கொன்றுள்ளது மட்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
வனவிலங்கு பூங்கா மேலாளர் ஸ்டெப்பன் ஸ்ட்ராட் கூறுகையில், பூங்காவின் 152 வரலாற்றில் இதுவரை இப்படி நடந்தது இல்லை. புலி கூண்டுக்குள் நுழைய வேண்டும் என்று ஒருவர் நினைத்தால், அதை தடுக்க முடியாது.
இந்த சம்பவத்தால் பூங்கா பாதுகாப்பை மறு ஆய்வு செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
புலிகள் கொன்ற வாலிபரின் பெயர், அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்ற விவரங்களை பொலிசார் வெளியிடவில்லை.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
