டுவிட்டரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுமி

NEWSONEWS  NEWSONEWS
டுவிட்டரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுமி

டென்மார்க்கின் ரோட்டர்டாம் நகரை சேர்ந்தவள் சாரா(வயது 14), தனது டுவிட்டர் பக்கத்தில் இப்ராகிம் என பெயரை மாற்றியுள்ளார்.

அத்துடன் தனது பக்கத்தில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த நான் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவன் என்றும் வருகிற யூன் 1ம் திகதி உண்மையில் ஏதோ பெரியதாக நடக்க போகிறது எனவும் தெரிவித்து இருந்தார்.

இதுதொடர்பாக அமெரிக்க விமான நிறுவனத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது, தொடர்ந்து சாராவிடம் டுவிட்டரில் சாதாரணமாக பேச்சு கொடுத்து, அவளது உண்மையான பெயர் மற்றும் விலாசத்தை தெரிவிக்குமாறு கேட்டனர்.

விலாசத்தை பெற்ற நிறுவனம், எப்.பி.ஐக்கு தகவல் அளித்தது.

இதனையடுத்து சாரவிடம் நடத்திய விசாரணையில், தான் பிரபலம் அடைவதற்காக இத்தகவலை வெளியிட்டதாகவும், தற்போது இந்த தகவலை அழித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை