நியூசிலாந்து – இலங்கை : 4 ஆவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது
நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 4 ஆவது ஒருநாள் போட்டி மழையால் இடைநடுவில் கைவிடப்பட்டது.
நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அவ்வணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.
இத் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணியும் 3 ஆவது போட்டியில் இலங்கை அணியும் பெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற நிலையில் நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றிருந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 4 ஆவது ஒருநாள் போட்டி நியூசிலாந்தின் நெல்சன் நகரில் இன்று ஆரம்பமாகியது.
இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.ஆரம்பமே போட்டியில் மழை குறுக்கிட போட்டி 24 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய நியூசிலாந்து அணி 9 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து75 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி தடைப்பட 4 ஆவது போட்டி எவ்வித முடிவுகளும் இன்றி கைவிடப்பட்டது.
இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 5 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி எதிர்வரும் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
2016-01-02



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
