தடையை எதிர்த்து செப் பிளாட்டர் மேல்முறையீடு

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
தடையை எதிர்த்து செப் பிளாட்டர் மேல்முறையீடு

உலகளவில் கால்பந்து நிர்வாகத்தில் இடம்பெற்றிருந்த இரண்டு முக்கிய நபர்களான செப் பிளாட்டர் மற்றும் மிஷேல் பிளாட்டினி ஆகியோருக்கு எட்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தான் கொள்கை அடிப்படையில் நடந்துகொள்ளும் ஒரு மனிதர் எனத் தெரிவித்துள்ள செப் பிளாட்டர், தன்மீதான தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதாகக் கூறியுள்ளார்.

தன்மீது அவதூறுகள் சுமத்தப்படுவது குறித்து தான் மிகவும் வருந்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு பிளாட்டினிக்கு இரண்டு மில்லியன் டாலர்களை செப் பிளாட்டர் சட்டவிரோதமாக அளித்தார், அவ்வகையில் அந்த இருவரும் ஃபிஃபாவின் தார்மீக நெறிமுறைகளின் மீறினர் என்று அந்த அமைப்பின் விசாரணை ஒன்று கண்டறிந்தது.

ஃபிஃபாவின் தார்மீக நெறிமுறைகளுக்கான குழுவிடம், பிளாட்டினிக்கு அளித்த தொகை, நியாயமானதே என்பதை தான் தெளிவுபடுத்தியதாகக் கருதுவதாகவும் அவர் கூறுகிறார்.

அவர்கள் அந்த எட்டு ஆண்டுகளுக்கு எவ்விதத்திலும் கால்பந்து விளையாட்டுடன் தொடர்புபட முடியாது என சர்வதேசக் கால்பந்து சம்மேளனமான ஃபிஃபா இன்று அறிவித்தது.

இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வருகிறது.

ஆனால்  செய்தியாளர் ஒருவரோ, ஃபிஃபா நிர்வாகமே கடந்த பல மாதங்களாக கொந்தளிப்பில் இருந்துள்ளது என்றும், ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது எனவும் கூறுகிறார்.

மூலக்கதை