இந்­திய கிரிக்கெட் வீரர் அமெரிக்காவில் மூன்றாவது திருமணம்! (PHOTOS)

கதிரவன்  கதிரவன்
இந்­திய கிரிக்கெட் வீரர் அமெரிக்காவில் மூன்றாவது திருமணம்! (PHOTOS)

இந்­திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலை­வ­ரான மொஹமத் அஸா­ருதீன், தான் 3 ஆவது தட­வை­யாக திரு­மணம் செய்­து­கொண்­டுள்­ள­தாக வெளி­யான செய்­தி­களை மறுத்­துள்ளார்.

52 வய­தான மொஹம்மத் அஸா­ருதீன் தனது இரண்­டா­வது மனை­வி­யான நடிகை சங்­கீதா பிஜ்­லா­னியை 2010 ஆம் ஆண்டு விவா­க­ரத்து செய்தார்.

அதன்பின் அமெ­ரிக்கப் பிர­ஜை­யான யுவ­தி­யொ­ரு­வரை அஸா­ருதீன் காத­லித்து வரு­வ­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

தற்­போது ஷெனோன் தல்வார் எனும் மேற்­படி யுவ­தி­யுடன் அஸா­ருதீன் நெருங்கிப் பழகி வரு­கிறார்.

லொஸ் ஏஞ்­சல்ஸை சேர்ந்த ஷெனோன் மேரி தல்வார், தற்­போது டில்­லியில் வசிக்­கிறார். பெஷன் டிஷை­ன­ரான அவர், யோகா­சன ஆசி­ரி­ய­ருக்­கான சான்­றி­த­ழையும் கொண்­டுள்­ள­தாக தெரி­வித்துள்ளார்.

அஸா­ரு­தீனும் ஷெனோன் மேரியும் நெருக்­க­மாக காணப்­படும் புகைப்­ப­டங்கள் சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் ஊட­கங்­க­ளிலும் ஏற்­கெ­னவே வெளி­யா­கியி­ருந்­தன.

ஷெனோன் மேரி தனது மிகச்­சி­றந்த நண்பி என மொஹம்மத் அஸா­ருதீன் கூறி­யி­ருந்தார். இந்­நி­லையில், இவர்கள் இரு­வரும் திரு­மணம் செய்­து­கொண்­டுள்­ள­தாக இந்­திய ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டி­ருந்­தன.

அஸா­ரு­தீனின் சார­தி­யான ஜான் மொஹம்மத் அண்மையில் உயி­ரி­ழந்­த­தை­ய­டுத்து அவரின் வீட்­டுக்கு அஸா­ரு­தீனும் ஷெனோன் மேரியும் சென்­ற­தா­கவும் அப்­போது அஸா­ரு­தீனின் மனைவி என ஷெனோன் மேரி அறி­மு­கப் ­படுத்­தப்­பட்­ட­தா­கவும் அச்­செய்­தி­களில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆனால், இச்­செய்­தி­களை அஸா­ருதீன் நிரா­க­ரித்­துள்ளார்.
“எனது 3 ஆவது திருமணம் தொடர்பாக செய்திகள் தவறானவையும் பொய்யானவையுமாகும். வெளியிடுவதற்குமுன் தரவுகளை சரிபார்த்துக்கொள்ளுங்கள்” என அவர் கூறியுள்ளார்.

1963 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தவர் மொஹம்மத் அஸாருதீன்.

1984 டிசெம்பர் 31 ஆம் திகதி ஆரம்பமான இங்கிலாந்துக்கு எதிரான போட்டி மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார்.

99 டெஸ்ட் பேட்டிகளிலும் 334 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் அவர் இந்தியாவின் சார்பில் விளையாடினார்.

சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் சிறந்த களத்தடுப்பாளராகவும் விளங்கிய அவர். இந்திய கிரிக்கெட் அணியின் மிக வெற்றிகரமான அணித் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார்.

எனினும், அவர் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக 2000 ஆம் ஆண்டு குற்றச்சாட்டு கிளம்பியதையடுத்து அவரின் கிரிக்கெட் வாழ்க்கை பாதிப்படைந்தது. அவருக்கு ஆயுட்காலத் தடை விதிக்கப்பட்டது.

தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வந்த அஸாருதீன் 2009 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார். தன் மீதான தடைக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டு வந்தார்.

2012 ஆம் ஆண்டு நீதிமன்றத்தினால் அத்தடை நீக்கப்பட்டது. எனினும், அப்போது 49 வயதானவராக இருந்த அஸாருதீனின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுற்றிருந்தது.

நவ்ரின் என்பவரை முதல் தடவையாக அஸாருதீன் திருமணம் செய்தார். இத்தம்பதிக்கு இரு மகன்கள் பிறந்தனர். 1996 ஆம் ஆண்டு நவ்ரினை விவாகரத்துச் செய்துவிட்டு பொலிவூட் நடிகை சங்கீதா பிஜ்லானியை அஸாருதீன் திருமணம் செய்தார்.

2010 ஆம் ஆண்டு இவர்கள் பிரிந்தனர். அஸாருதீனின் மகன் அயாஸுதீன் 2011 ஆம் ஆண்டு வாகன விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்திருந்தார்.

2015-12-25

மூலக்கதை