இந்தியாவுடனான கிரிக்கெட் போட்டிகள் குறித்த முடிவை பாகிஸ்தான் இன்று அறிவிக்கிறது
Monday, 14 December 2015 08:16
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டித்தொடர்கள் நடத்துவதுக் குறித்த முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவிக்க உள்ளது.
2015ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை இந்தியா-பாகிஸ்தான் இடையே 6 கிரிக்கெட் போட்டித் தொடர்களை நடத்துவது என்கிற புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்த வருடத்தில் போடப்பட்டது.இந்த போட்டிகளின் முதல் போட்டித் தொடரை அரபு அமீரக நாடுகளில் நடத்தலாம் என்று இரு நாடுகளும் முடிவெடுத்த நிலையில், இந்த முதல் போட்டித் தொடரை இலங்கையில் நடத்த சர்வதேச கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்தது. இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், பாகிஸ்தான் அரசும் இதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில்,இந்தியா தரப்பில் இன்னமும் மவுனம் நீடித்து வருகிறது.
இந்திய கிரிக்கெட் வாரியம் இப்போட்டிகளை நடத்தத் தயார் நிலையில் உள்ள நிலையில் இந்திய அரசிடமிருந்து இதற்கு இன்னமும் ஒப்புதல் வரவில்லை. இதுக்குறித்து இரண்டு நாட்களுக்குள் இந்திய அரசு அறிவிக்காவிட்டால், இந்தியாவுடனான கிரிக்கெட் போட்டிகளைக் கைவிடுவதுக் குறித்த முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்த நிலையில், இரண்டு நாள் கெடு நேற்றுடன் முடிவடைந்துள்ளது. எனவே, இதுக்குறித்த முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவிக்கும் என்று எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
