”அவுஸ்திரேலியா நாட்டினர் இனவெறியர்கள்” வாடகைக்கு வீடு தர மறுத்த பிரித்தானியர்

NEWSONEWS  NEWSONEWS
”அவுஸ்திரேலியா நாட்டினர் இனவெறியர்கள்” வாடகைக்கு வீடு தர மறுத்த பிரித்தானியர்

எடின்பர்க் பகுதியில் வீடு வாடகைக்கு விடப்படும் என்ற விளம்பரத்தின் அடிப்படையில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த 24 வயதான Laura Gratton என்பவர் அந்த வீட்டின் உரிமையாளரை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.

வீடு வாடகைக்கு கேட்பது அவுஸ்திரேலிய நாட்டினர் என தெரிந்து கொண்ட அந்த நபர், வாடகைக்கு வீடு தர மறுப்பு தெரிவித்ததுடன்,

அவுஸ்திரேலியர்கள் மதுவுக்கு அடிமையானவர்கள் என்றும் இனவெறியர்கள் என்றும் கடுமையான வார்த்தைகளால் பதில் அனுப்பியுள்ளார்.

மேலும், ஐரோப்பா முழுவதும் ஆஸ்திரேலியர்களின் குணம் அறிவர் என்றும், பிரான்ஸ் எப்படி சீஸ் வகைகளுக்கும் திராட்ச்சை மதுவுக்கும் பெயர்போனதோ அதுபோலவே அவுஸ்திரேலியர்களும் போதைக்கும் இனவெறிக்கும் என்றுள்ளார்.

கடுமையான வார்த்தைகளால் வந்த இந்த பதில் கேட்டு அதிர்ச்சி அடைந்த கிராட்டன் செய்வதறியாது திகைத்துள்ளார்.

பன்முகத்தன்மை கொண்ட அவுஸ்திரேலியா நாடு அனைத்து தரப்பு மக்களையும் ஏற்றுக்கொள்ளும் தன்மை கொண்டது என சுட்டிக்காட்டியா கிராட்டன்,

இனம் சார்ந்த பிரச்சனைகள் உலகில் அனைத்து நாடுகளில் இருப்பது போன்று அவுஸ்திரேலியாவிலும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

வீடு தரவும் மறுப்பு தெரிவித்ததோடல்லாமல் தரக்குறைவாக பேசிய அந்த நபருக்கு பதிலளித்த கிராட்டன், இனவெறியராக இருப்பதனால் மட்டுமே, போதிய அறிவின்றி மொத்த இனத்தின் மீது வெறுப்பை காட்டுவதாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அந்த விளம்பர நிறுவனம், ஒரு தேசத்தையே இனவெறியராக சித்தரித்து தனியொருவரை களங்கப்படுத்துவது கடுமையாக கண்டிக்கப்படவேண்டியது என தெரிவித்துள்ளது.

மூலக்கதை