நியூஸிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இலங்கை துடுப்பாட்டம்
நியூஸிலாந்து அணிக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 264 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 இருபதுக்கு 20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றது.
இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி கடந்த வியாழக்கிழமை நியூசிலாந்தின் டன்டினில் இடம்பெற்றது.
இப் போட்டியில் நியூசிலாந்து அணி 122 ஓட்டங்களால் வெற்றிபெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலைபெற்றுள்ளது.
இந் நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான மிக முக்கியமானதும் இறுதியுமான 2 ஆவது டெஸ்ட் போட்டி இன்று ஹமில்டனில் ஆரம்பமாகியது.
இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 264 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் சிறிவர்தன 62 ஓட்டங்களையும் அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியுஸ் ஆட்டமிழக்காது 63 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
நியூசிலாந்து அணி சார்பாக பந்துவீச்சில் போல்ட் மற்றும் சௌத்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.
அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியுஸ் 63 ஓட்டங்களுடனும் சாமிர ஓட்டமெதனையும் பெறாத நிலையிலும் ஆடுகளத்திலுள்ளனர்.
2015-12-18



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
