மணிக்கு 213 கி.மீ வேகத்தில் சிட்னி நகரை தாக்கிய புயல்: வீடுகள், கட்டிடங்கள் பலத்த சேதம் (வீடியோ இணைப்பு)

NEWSONEWS  NEWSONEWS
மணிக்கு 213 கி.மீ வேகத்தில் சிட்னி நகரை தாக்கிய புயல்: வீடுகள், கட்டிடங்கள் பலத்த சேதம் (வீடியோ இணைப்பு)

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரை இன்று பெரிய புயல் ஒன்று தாக்கியது.

மணிக்கு 213 கிலோ மீற்றர் வேகத்தில் ஒரு அதிவிரைவு ரயிலை போன்று அந்த புயல் தாக்கியது.

புயலுடன் கிரிக்கெட் பந்தின் அளவில் ஆலங்கட்டி மழையும் விழுந்ததால் மக்கள் பீதியடைந்தனர்.

சுழற்றியடித்த புயல் காற்றுடன் தொடர்ந்து பெய்த ஆலங்கட்டி மழையால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகளின் மேற்கூரைகள் சேதம் அடைந்தன.

கார்கள் தலைகீழாக புரட்டிப் போடப்பட்டு குப்புற கவிழ்ந்து கிடந்தன. மேலும் ஆலங்கட்டி மழையின் காரணமாக  நகரின் பல பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது.

ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு செல்லும் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் நகரின் பல பகுதிகள் இருளில் மூழ்கி கிடக்கின்றன.

சிட்னி நகரின் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் மற்றும் இங்கிருந்து புறப்பட்டு செல்லும் பெரும்பாலான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நியூ சவுத் வேல்ஸ் வானிலை மையத்தில் பதிவானதிலேயெ இது தான் வலிமையானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பலத்த சேதமடைந்த சிட்னியின் குர்னெல் பகுதி இயற்கை பேரழிவு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கிபோயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை