வெள்ள நிவாரணம் 1,940 கோடி ரூபாய் வழங்கிய மோடி! இன்னமும் 3,000 கோடி ரூபாய் வழங்கும் உத்தேசம்!!!

CANADA MIRROR  CANADA MIRROR
வெள்ள நிவாரணம் 1,940 கோடி ரூபாய் வழங்கிய மோடி! இன்னமும் 3,000 கோடி ரூபாய் வழங்கும் உத்தேசம்!!!

தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிப்புகள் மிகக் கடுமையாக இருப்பதால் மீட்பு, நிவாரணப் பணிகளுக்கு உடனடியாக ரூ. 5 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என பிரதமரிடம் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று உடனடியாக ரூ. 1,940 கோடி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் ஜெயலலிதாவும் வியாழக்கிழமை பார்வையிட்டனர். பிறகு பிரதமர் மோடியை சந்தித்து மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை விளக்கினார். தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நிவாரணப் பணிகளையும் எடுத்துரைத்தார்.

தொடர்புபட்ட செய்தி: சென்னை வெள்ளம் எதனால் ஏற்பட்டது? கரையோரங்களை இழக்கப் போகும் இலங்கை!! மாலைதீவு கடலில் மூழ்கும்!!!

தமிழகத்துக்கு கூடுதலாக 10 ராணுவ குழுக்களையும், 20 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்களையும் அனுப்ப வேண்டும் என்ற முதல்வரின் கோரிக்கையையும் பிரதமர் ஏற்றுக் கொண்டார். இதற்காக பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்தார் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சென்னை வெள்ளத்தை நேரில் வந்து பார்வையிட்ட பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ள திமுக தலைவர் கருணாநிதி, நிதி மக்களை சென்றடைய அனைத்து கட்சி குழு தேவை என வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்த நிவாரண உதவித் தொகை ரூ940 கோடியுடன் மேலும் ரூ1000 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார். பிரதமர் மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன்,

மழை,வெள்ளத்தால் பாதிப்புக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு முழு நிவாரணம் கிடைக்கக் கூடிய அளவுக்கு பாதிப்புகளைக் ஆய்வு செய்து மேலும் தேவையான நிதியை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் எனவும் கருணாநிதி கூறியுள்ளார்.

12 total views, 12 views today

மூலக்கதை