இலங்கைக்கு எதிரான டெஸ்டில் வலுவான நிலையில் நியூசிலாந்து
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதலாவது நாளில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 409 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது.
நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.
இத் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று நியூசிலாந்தின் டன்டினில் இடம்பெற்று வருகின்றது.
இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 409 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையிலுள்ளது.
துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பாக மார்டின் குப்தில் 156 ஓட்டங்களையும் வில்லியம்ஸன் 88 ஓட்டங்களையும் மெக்குலம் 75 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக லக்மல் , பிரதீப் மற்றும் சாமிர ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பிரக்வெல் 39 ஓட்டங்களுடனும் வெக்னர் ஓட்டமெதனையும் பெறாது ஆடுகளத்தில் உள்ளனர்.
2015-12-10



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
