தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா
தென்னாபிரிக்க அணிக்கெதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என கைப்பற்றியது.
இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது.
இந்நிலையில் மொஹாலியில் இடம்பெற்ற 1 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 108 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
பெங்களுரில் இடம்பெற்ற 2 ஆவது போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் நாக்புரில் இடம்பெற்ற 3 ஆவது போட்டியில் இந்திய அணி 124 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை தன்வசப்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 4 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கடந்த 3 ஆம் திகதி டில்லியில் ஆரம்பமானது.
இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 334 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக ரஹானே 127 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் அபோர்ட் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 121 ஓட்டங்களைப்பெற்று 213 ஓட்டங்களால் பின்னிலை வகித்தது.
இதையடுத்து 213 ஓட்டங்கள் முன்னிலை வகிக்க இந்திய அணி தனது 2 ஆவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடியது.
இந்திய அணி தனது 2 ஆவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 267 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடை நிறுத்திக்கொண்டது.
இந்நிலையில் தென்னாபிரிக்க அணிக்கு 480 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தென்னாபிரிக்க அணி வீரர்கள் போட்டியை சமன்செய்வதற்காக எடுத்த முயற்சிகள் அனைத்து வீண் போக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ஓட்டங்களைப்பெற்று 337 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இதையடுத்த இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என கைப்பற்றியது.
இப் போட்டியின் ஆட்டநாயகனாக ரஹானே தெரிவு செய்யப்பட்டதுடன் தொடர் ஆட்டநாயகனாக அஸ்வின் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2015-12-07



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
