ஹியூக்ஸ் மறைந்து இன்றுடன் ஒருவருடம் : நினைவு தினத்தில் வரலாற்று பதிக்கும் டெஸ்ட் போட்டி இன்று

கதிரவன்  கதிரவன்
ஹியூக்ஸ் மறைந்து இன்றுடன் ஒருவருடம் : நினைவு தினத்தில் வரலாற்று பதிக்கும் டெஸ்ட் போட்டி இன்று

உலகில் அதிகம் பேர் தொலைக்­காட்சி வாயி­லாக ரசிக்கும் விளை­யாட்­டாக கால்­பந்து, டென்னிஸ் போட்­டி­க­ளுக்கு அடுத்­த­தாக கிரிக்கெட் தான் உள்ளது. அமெ­ரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற பெரிய நாடுகள் இன்னும் கிரிக்­கெட்டில் பெரிய அளவில் கால்­ப­திக்­க­வில்லை. ஆனால் உலகில் அதிக மக்கள் கிரிக்கெட் போட்­டி­களை ரசிக்­கின்­றனர் என்­கி­றது புள்­ளி­வி­வ­ரங்கள். ஏனெனில் கிரிக்கெட் உடல் மற்றும் மன­உ­றுதி ஆகிய இரண்­டையும் சோதிக்கும் அற்­புத விளை­யாட்டு. எதிர்­பார்க்­கவே முடி­யாத பல ஆச்­சரி­யங்கள் கிரிக்­கெட்டில் நிகழும்.

பிராட்மன், சச்சின், முர­ளி­தரன், ஷேன் வோர்ன், லாரா, கலிஸ், சங்­கக்­கார, சேவாக், டி வில்­லியர்ஸ் என பல ஜாம்­ப­வான்கள் கோலோச்­சிய விளை­யாட்டு இது. தனது நாட்டை தாண்டி மற்ற நாட்டு வீரர்­க­ளையும் ரசிக்கும், ஆரா­திக்கும், கொண்டாடும் மனநிலை கொண்­ட­வர்கள் கிரிக்கெட் ரசி­கர்கள். ஆஸி.வீரர் பிலிப் ஹியூக்ஸ் மறைந்­த­போது ஒட்டு மொத்த கிரிக்கெட் உல­கமும் கண்ணீர் வடித்­தது. இதேவேளை பிலிப் ஹியூக்ஸ் உயிரிழந்து இன்றுடன் ஒருவருடம் நிறைவடைகின்றது. இந்நிலையில் அவரை நினைவு கூறும் வகையில் பகலிரவு போட்டி இன்று நடத்தப்படுகின்றது.

தனது 25 வயதில் உயிரிழந்த பிலிப் ஹியூக்ஸ் 26 டெஸ்ட், 25 ஒருநாள் போட்டி மற்றும் ஒரேயொரு 20 ஓவர் போட்டியில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆரம்­பத்தில் டெஸ்ட் கிரிக்கெட், பின்னர் 60 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டி,அதன் பின்னர் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டி, பின்னர் இரு­ப­துக்கு -20 கிரிக்கெட் போட்டி என பல வடி­வங்­களில் கிரிக்கெட் மாறி வந்­தி­ருக்­கி­றது.

தற்­போது நவீன டிஜிட்டல் யுகத்தில் புதிய மாற்­றங்­க­ளுடன் தன்னை மேலும் மாற்­றிக்­கொண்டு புதிய வடி­வத்தில் முத்­தாய்ப்பாய் வந்­தி­ருப்­பது தான் “பக­லி­ரவு டெஸ்ட் போட்­டிகள்”.

138 வருட கிரிக்கெட் வர­லாற்றில் முதன்­மு­றை­யாக சர்­வ­தேச அள­வி­லான டெஸ்ட் போட்டி பக­லி­ரவு ஆட்­ட­மாக நடக்­க­வுள்­ளது. அவுஸ்­தி­ரே­லியா, – நியூ­ஸி­லாந்து அணி­க­ளுக்­கி­டை­யே­யான இந்த டெஸ்ட் போட்டி அவுஸ்­தி­ரே­லிய நாட்டில் உள்ள அடி­லெய்ட் மைதா­னத்தில் இன்று ஆரம்­ப­மா­கின்­றது.

பொது­வாக கிரிக்­கெட்டில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற பந்­துகள் தான் பயன்­ப­டுத்­தப்­படும். ஆனால் இந்த பக­லி­ரவு டெஸ்ட் போட்­டியில் பிங்க் நிற பந்­துகள் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன. கொக்­க­புரா நிறு­வனம் இதற்­கென பிரத்தி­யே­க­மாக பந்­து­களை தயா­ரித்­துள்­ளது. பிங்க் நிற பந்­துகள் குறித்து ஆத­ரவும் எதிர்ப்பும் என பல சர்ச்­சைகள் சுற்­றி­யுள்­ளன.

டெஸ்ட் போட்­டி­களை பொறுத்­த­வ­ரையில் அதன் சிறப்­பம்­சமே துடுப்­பாட்டம், பந்­து­வீச்சு இரண்­டுக்கும் சம­வாய்ப்பு இருக்கும். பக­லி­ரவு போட்­டி­களை பொறுத்­த­வ­ரையில் இரவு நேரத்தில் பனிப்­பொ­ழிவு இருந்தால் அதி­ர­டி­யாக விளை­யாடும் துடுப்­பாட்ட வீரர்­க­ளுக்கு மகிழ்ச்­சிதான். பொது­வாக காலை நேரத்தில் முதல் ஒரு மணி­நேரம் மைதானம் பந்­து­வீச்­சுக்கு ஓர­ளவு சாத­க­மாக இருக்கும். ஆனால் இப்­போட்டி மதி­யத்­துக்கு மேல்தான் தொடங்கும் என்­பதால் மைதா­னத்தில் வெயில் பட்டால், பிட்ச் கடி­ன­மா­கி­விடும். இந்­நி­லையில் துடுப்­பாட்டம் சிறிது எளி­தாக இருக்கும் என எதிர்­பார்க்­கலாம்.

இப்­போது டெஸ்ட் போட்­டி­களை பார்க்க வரும் கூட்டம் மிகவும் குறை­வாக உள்­ளது. பக­லி­ரவு போட்­டி­க­ளாக நடக்­கும்­போது மாலை நேரத்தில் நிறைய பார்­வை­யா­ளர்கள் வரு­வார்கள் என்­பதால் டிக்கெட் விற்­பனை அமோ­க­மாக இருக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இந்த டெஸ்ட் போட்டி வெற்றிகரமாக நடைபெற்றால் படிப்படியாக எல்லா நாடுகளிலும் பகலிரவு டெஸ்ட் போட்டி நடைமுறைக்கு வரும். ஆக ஆஸி. -– நியூஸி. இடையேயான இந்த போட்டி உற்சாகமான டெஸ்ட் போட்டியாக, ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

2015-11-27

மூலக்கதை