விளையாட்டுத்துறையை ஊக்குவிக்க பாகிஸ்தான் உதவிகளை வழங்கும் : பாக்.தூதுவர்
இலங்கையின் விளையாட்டுத்துறையை மேம்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் சயீட் ஷாகில் உசைன் உறுதியளித்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சில் நேற்று முன்தினம் நடைபெற்ற, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரிஸ் ஆகியோருடன் இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் சயீட் ஷாகில் உசைன் சந்தித்துப் பேசினார். இதன்போதே இலங்கைக்கு விளையாட்டுத்துறையை ஊக்குவிக்க உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
ஸ்கோஸ், மேசைப்பந்து, டென்னிஸ், பிலியர்ட்ஸ், ஸ்னூக்கர் உள் ளிட்ட விளையாட்டுக்களுக்கு தேவையான பயிற்சிகள் மற்றும் தொழில் நுட்பம், ஆலோசனைகளை பாகிஸ்தான் வழங்கும் என்றும், எதிர்காலத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் கைகோர்த்து ஆஷஸ் கிண்ண கிரிக் கெட் தொடர் ஒன்றையும் இலங்கையில் நடத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தூதரின் இக்கருத்திற்கு விளையாட்டுத்துத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2015-12-03



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
