படப்பிடிப்பின்போது அமீர்கானுக்கு தோள்பட்டையில் காயம்
இந்தி நடிகர் அமீர்கான் தற்போது ‘தங்கல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். குத்துச்சண்டை வீரர் மகாவீர் சிங்கின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட இந்த படத்தை இயக்குனர் நிதிஷ் திவாரி இயக்குகிறார்.
இதன் படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடந்து வருகிறது. இந்த நிலையில், படப்பிடிப்பின் போது அமீர்கான் குத்துச்சண்டை போடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அவரது தோள்பட்டையில் திடீரென காயம் ஏற்பட்டது.
இதனால், அமீர்கான் வலியால் துடித்தார். உடனடியாக படக்குழுவினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், மேற்கொண்டு சிரமம் எடுக்கக்கூடாது என்றும், ஒரு வார காலம் ஓய்வு தேவை என்றும் அறிவுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து, அமீர்கான் மும்பை அழைத்து வரப்பட்டார். அவர் தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இதுபற்றி அமீர்கான் தன்னுடைய ‘டுவிட்டர்’ வலைதள பக்கத்தில், ‘‘இது ஒன்றும் பெரிய அளவிலான காயம் அல்ல. ஒரு வார ஓய்வுக்கு பின்னர், படப்பிடிப்புக்கு திரும்பி விடுவேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
2015-11-17



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
