உலக கோப்பை ரக்பி இறுதிக் கட்டம் : சில சுவாரஷ்யமான தகவல்கள்
Friday, 30 October 2015 14:15
உலக கோப்பை ரக்பி தொடரின் இறுதிக்கட்டம் இது. இன்று மூன்றாம் இடத்துக்கான போட்டி தென் ஆபிரிக்கா - ஆர்ஜெண்டீனா அணிகளுக்கு இடையில் நடைபெறுகிறது. நாளை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. 1991, 1999 என இரு முறை ரக்பி உலக கோப்பையை ஆஸ்திரேலியா வென்றுள்ளது.
இந்நிலையில், இந்த வருடத்திற்கான மிகச் சிறந்த ரக்பி வீரரை தெரிவு செய்வதற்கான பரிந்துரைகள் வெளியாகியுள்ளன.
நியூசிலாந்து வீரர்கள், டானியல் கார்டெர், ஜூலியன் சவீயா ஆகியோரும் ஆஸ்திரேலிய வீரர்கள் மிகெல் கூபர், டாவிட் போகொக், ஆகியோரும் ஸ்காட்லாந்து கேப்டன் கிரேன் லாயிட்லாவும், வேல்ஸ் அணியின் அலுன் வ்யின் ஜோன்ஸும் மொத்தமாக 6 பேர் பரிந்துரையில் உள்ளனர்.
இதில் டானியல் கார்டர் ஏற்கனவே இரு தடவை இந்த விருதை பெற்றுள்ளார்.
இதேவேளை இந்த வருடத்திற்கான ரக்பி அணி பரிந்துரையும் வெளியாகியுள்ளது. ஆர்ஜெண்டீனா, ஜப்பான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகள் இதில் போட்டியிடுகின்றன. இதில் ஆர்ஜெண்டீனாவும், ஜப்பானும் உலக கோப்பை ஜாம்பவான் அணிகள் பலவற்றுக்கு அதிர்ச்சியளித்து வெற்றிகளை குவித்த அணிகள் என்பன குறிப்பிடத்தக்கன.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
