சச்சின் அறிவு திறமையை பயன்படுத்தி இருந்தால் இன்னும் புகழ் சேர்த்திருக்கலாம் - கபில்
Friday, 30 October 2015 04:57
சச்சின் தமது அறிவு, திறமையை பயன்படுத்தி கிரிக்கெட் விளையாடி இருந்தால் இரட்டை சதம், மூன்று சதம் என்று அடித்திருக்கலாம் என்று, முன்னால் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கூறியுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றுக்காக துபாய் சென்றுள்ள கபில்தேவ், அங்கு ஒரு ஆங்கில நாளிதழுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அந்த நேர்காணலில், சச்சின் ஈவு இரக்கமற்ற அதிரடி ஆட்டத்தை தமது முதிர்ச்சி காலத்திலாவது ஆடி இருக்க வேண்டும் என்றும், வீரேந்திர ஷேவாக் போல களத்தில் இறங்கினால் அதிரடியாக ரன்கள் குவிக்கும் முயற்சியில் சச்சின் ஒரு போதும் ஈடுபடவில்லை என்றும் கூறியுள்ளார்.
அவர் எப்போதும் ஒரு சதம் அடிப்பதிலேயே குறியாக விளையாடி இருக்கிறார் என்றும், அவரது அறிவு, திறமை, அனுபவம் இவற்றை உபயோகப்படுத்தி முறையாக விளையாடி இருந்தால் இரட்டைசதம், முச்சதம் என்று கூட அடித்திருக்கலாம் என்றும், இன்னும் இதைவிட பேரும் புகழும் அடைந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார் கபில். அதுமட்டுமின்றி அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு தமக்குக் கிடைத்திருந்தால் சச்சினுக்கு நல்ல அறிவுரை கூறி, அவரை மேலும் புகழடைய வைத்திருப்பேன் என்றும் கபில்தேவ் தமது நேர்காணலில் கூறியுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
