வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் வேறு அணிக்காக தோனி விளையாட முடிவு
Saturday, 24 October 2015 08:21
வரவிருக்கும் 9 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வேறு அணிக்காக தோனி விளையாட முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 8 ஆண்டுகளாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தவர் மகேந்திர சிங் தோனி. ஆனால் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட புகார் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணி அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.இதையடுத்து இந்த இரண்டு அணிகளில் உள்ள வீரர்கள் எந்த அணிக்காக விளையாடுவார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
ஐபிஎல் அணிகளுக்கு மேலும் இரண்டு புதிய அணிகள் உருவாகவும் உள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், தோனி எந்த அணியில் விளையாடுவார், அல்லது இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்காமல் இருப்பாரா என்கிற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது. இந்நிலையில்தான் நேற்று முன்தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசனை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தோனி சந்தித்தார்.அப்போது அவரிடம் ஐபிஎல் போட்டிகளில் வேறு அணிக்காக விளையாட தாம் முடிவு எடுத்துள்ளதுக் குறித்துத் தெரிவித்ததாகவும், ஸ்ரீனிவாசனும் சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
