இந்திய மீனவர்கள் 19 பேருக்கு காவல் நீட்டிப்பு

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
இந்திய மீனவர்கள் 19 பேருக்கு காவல் நீட்டிப்பு

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள நாகை மீனவர்கள் 19 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மீண்டும் காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் நாகை மாவட்டத்தை சேர்ந்த 19 மீனவர்கள் கடந்த 10ம் திகதி மீன்பிடிக்க சென்ற போது, இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் பருத்துறை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த மீனவர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் இவர்களை எதிர்வரும் 6.11.2015ம் திகதி வரை விளக்கமறியலை நீடித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மூலக்கதை