எப்படி படுகொலை செய்வது? ஐஎஸ் வீடியோவை பார்த்து தாயை கொன்ற சிறுமி

NEWSONEWS  NEWSONEWS
எப்படி படுகொலை செய்வது? ஐஎஸ் வீடியோவை பார்த்து தாயை கொன்ற சிறுமி

டென்மார்க் நாட்டை சேர்ந்தவர் லிசா போர்ச்(வயது 15) இவர் ஐஎஸ் தீவிரவாதியான அப்துல்லா என்ற வாலிபரை காதலித்து வந்தார்.

இந்த காதலுக்கு லிசாவின் தாயார் எதிர்ப்பு தெரிவித்ததுடன், உன்னை விட வயது அதிகம் உள்ள நபருடன் பழகாதே என்றும் கண்டித்துள்ளார்.

இந்நிலையில் ஐஎஸ் இயக்கத்தினரால் ஈர்க்கப்பட்ட லிசா, அந்த இயக்கத்தில் சேரவும் முடிவு செய்துள்ளார்.

இதனால் காதலன் அப்துல்லாவை வீட்டுக்கு வரவழைத்து, தாயை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.

இதன்படி ஐஎஸ் தீவிரவாதிகள் படுகொலை செய்வது போன்றே, தாயை 20 முறை குத்திக் கொலை செய்துள்ளார்.

பின்னர் தனது தாயாரை மர்ம நபர் ஒருவர் கொன்றுவிட்டு தப்பிவிட்டார் என பொலிசாரிடம் நாடகமாடி உள்ளார்.

பொலிசார் சோதனை செய்து பார்த்ததில், காதலரின் இருவரின் கைரேகை அடையாங்களை வைத்து கொலை செய்யததை கண்டறிந்தனர்.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த பொலிசார் இருவரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கில் லிசாவிற்கு 9 வருடங்களும் அவருடைய காதலனுக்கு 13 வருடங்கள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மூலக்கதை