டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு 4.33-ஆக சரிவு
பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 8- 17 ஆண்டுகளுக்குப் பின் டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு 4.33-ஆக சரிவு கண்டுள்ளது. அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் அதன் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளதாலும், சீனாவின் பொருளாதா வீழ்ச்சி காரணமாகவும், ரிங்கிட்டின் விலை 1.62 வீழ்ச்சி கண்டுள்ளது
கடந்த 1998--ஆம் ஆண்டு நிலவிய பொருளாதார நெருக்கடியின் போது அவ்வாண்டு ஜனவரி மாதம் டாலருக்கு ரிகராக ரிங்கிட்டின் விலை 4.7125-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.