TUKAR திட்டத்தில் தோல்வி: வணிகர்கள் தான் காரணம்- அமைச்சர்
கோலாலம்பூர், 25 ஆகஸ்டு- துக்கார் திட்டத்தின் கீழ் பல வணிகர்கள் பல ஆயிரங்களை இழந்துள்ள போதும், அத்திட்டத்தை உள்நாட்டு வாணிபம், கூட்டுறவு, மற்றும் பயனீட்டாளர் அமைச்சர் டத்தோ ஹம்சா சைனுடின் தற்காத்துப் பேசியுள்ளார்.
மாறாக, துக்கார் திட்டம் தோல்வியடைந்தால், அதற்குச் சம்பந்தப்பட்ட அந்த கடை உரிமையாளர் தான் காரணம் என அமைச்சர் குற்றம் சாட்டினார்.
“துக்கார் திட்டம் வெற்றியடையாவிட்டால், அதற்கு அந்த வியாபாரிகள் தான் காரணம். நாம் வியாபாரம் செய்யும் போது, பொதுமக்களுடனான தொடர்பு மிகவும் அவசியம். சில நேரங்களில் கடை உரிமையாளர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளால், பொதுமக்களுக்கு அங்கு போக பிடிக்காமல் போகலாம்” என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், துக்கார் திட்டத்தில் பங்கு பெற்ற 95% கடை உரிமையாளர்கள் வெற்றியடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
துக்கார் திட்டம், பூமிபுத்ராக்களும், பூமி புத்ரா அல்லாதவர்களும் தங்களின் பழைய பாணியிலான கடையை உருமாற்றம் செய்வதற்காக அறிமுகம் செய்யப்பட்டது.
அண்மையில், இத்திட்டத்தில் பங்கு பெற்ற பெரும்பாலான வணிகர்கள் தோல்வியடைந்ததாகவும், கடையை மூடும் அளவுக்குத் தள்ளப்பட்டதாகவும், செய்தி வெளியிட்ட மலேசியன் இன்சைடர் பத்திரிகையை அவர் சாடினார்.
அப்பத்திரிகை வெளியிட்ட செய்தி 1 விழுக்காட்டு மக்களையே உட்படுத்தியதாகும்.
கடந்த 2013-ஆம் ஆண்டு தேசியக் கணக்காய்வாளட் அறிக்கையின் படி, துக்கார் திட்டத்தில் பங்கு பெற்ற 70 கடைகளில் 26% விழுக்காட்டு கடைகள் வியாபாரத்தில் நஷ்டத்தைத் தழுவியதாகவும், மேலும், 14 விழுக்காட்டினர், கடையை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
