17 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு சரிவு
கோலாலம்பூர், 27 ஜூலை- இன்று திங்கட்கிழமை, கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று ரிங்கிட்டின் மதிப்பு சரிவு கண்டுள்ளது. அந்த வகையில் 3.8110 அமெரிக்க டாலருக்கு ரிங்கிட்டின் மதிப்பு 0.1% விழுக்காடு சரிவு கண்டது. 1998-ஆம் ஆண்டுக்குப் பிறகு, ரிங்கிட் மதிப்பு இந்த அளவுக்குக் குறைந்தது இதுவே முதல் முறையாகும்.