கை செலவிற்கு பணம் கொடுக்காத மகன்கள் மீது வழக்கு தொடர்ந்த தந்தை: இத்தாலியில் வினோத சம்பவம்
வடக்கு இத்தாலியில் உள்ள Treviso என்ற நகரில் 80 வயதுடைய முதியவர் ஒருவர் வசித்து வருகிறார்.
பணியிலிருந்து ஓய்வு பெற்ற அவருக்கு ஓய்வூதியமாக மாதம் சுமார் 600 யூரோக்கள் வருகிறது. இதில், 300 யூரோக்களை வீட்டிற்கு வாடகையாக செலுத்தி விடுவதால், எஞ்சிய 300 யூரோக்களை வைத்துக்கொண்டு மாதம் முழுவதும் அவரது தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள முடியாமல் சிரமத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில், தனது இரண்டு மகன்களிடம் நபர் ஒருவருக்கு சுமார் 80 யூரோக்களை கொடுத்து உதவ வேண்டும் என்றும், அவ்வாறு கிடைக்கும் 160 யூரோக்கள் மற்றும் எஞ்சிய ஓய்வூதிய தொகையான 300 யூரோக்களை சேர்த்து, 460 யூரோக்களை கொண்டு தனது வாழ்க்கையை நடத்திக்கொள்வேன் என கேட்டுள்ளார்.
தந்தையின் கோரிக்கையை கேட்டு அதிர்ச்சி அடைந்த மகன்கள் இருவரும், அவர் கேட்ட பணத்தை தர முடியாது என திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த தந்தை, தனக்கு தேவையான பணத்தை பெற்று தர வேண்டும் என தனது மகன்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
முதியவரின் வழக்கறிஞரான Fabio Capraro என்பவர் கூறுகையில், முதியவர் தனது உரிமைகளுக்கு உட்பட்டு தான் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார் என்றும், குடும்பப் பொறுப்புகளை மதிக்காமல் செயல்படும் மகன்கள் அவர்களது தந்தைக்கு தேவையான பணத்தை அளிப்பது சரியானது தான் என கூறியுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்னும் சில தினங்களில் நீதிமன்றத்திற்கு வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
