றஹிமியா விளையாட்டுக்கழகத்தின் தவிசாளர் வெற்றிக்கிண்ணம் -2015
அக்கரைப்பற்று றஹிமியா விளையாட்டுக்கழகத்தின் 8வது ஆண்டின் நிறைவினையொட்டி 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து தவிசாளர் வெற்றிக்கிண்ணம் அக்கரைப்பற்று அதாஉல்லா விளையாட்டு மைதானத்தில் அக்கரைப்பற்று றஹிமியா விளையாட்டுக்கழகத்தின் தலைவர் ஏ.எம்.எம். சஹீட் (ஜே.பி) தலைமையில் நடைபெற்றது.
இதில் 48 கழகங்கள் பங்குபற்றி இறுதிப் போட்டிக்கு அட்டாளைச்சேனை பைனா விளையாட்டுக்கழகமும், அக்கரைப்பற்று றஹிமியா விளையாட்டுக்கழகமும் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது. இதில் நாணயசுழற்சியில் வெற்றி கொண்ட பைனா விளையாட்டுக்கழகம் முதலில் கழத்தடுப்பிற்கு இணக்கம் தெரிவித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய றஹிமியாவிளையாட்டுக் கழகம் தனக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்களில் 49 ஓட்டங்களை பெற்று எதிரணியின் வெற்றிக்கு நிர்ணயித்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அட்டாளைச்சேனை பைனா விளையாட்டுக்கழகம் 5 ஓவர்கள் முடிவில் 39 ஓட்டங்களை மாத்திரம் பெற்று அக்கரைப்பற்று றஹிமியா விளையாட்டுக்கழகம் 10 ஓட்டங்களால் 2015ம் ஆண்டிற்கான தவிசாளர் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.
இதில் வெற்றி பெற்ற றஹிமியா விளையாட்டுக்கழகத்திற்கு 20,000 ஆயிரம் ரூபா பணப்பரிசும் வெற்றிக்கேடையமும், இரண்டாம் இடத்ததை பெற்றுக்கொண்ட அட்டாளைச்சேனை பைனா விளையாட்டுக்கழகத்திற்கு 10,000 ரூபா பணப்பரிசும் வெற்றிக்கேடையமும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னால் மேயர் அதாஉல்லா அஹமட் சகி,அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னால் தவிசாளர் எம்.ஏ.றாசீக், அக்கரைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் ஏ.எல். சலாஹூதீன், அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னால் உறுப்பினர்கள் மற்றும் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம். அஜ்வத் உட்பட முக்கியஸ்தர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
இதில் இறுதிப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக அக்கரைப்பற்று றஹிமியா விளையாட்டுக்கழகத்தின் கே.ஆர். சஜாத், தொடர் ஆட்ட நாயகனாக பென்சின் அணியின் றெளப், சிறந்த பந்து வீச்சாளராக றஹிமியா அணியின் டீ. ஹஸ்லி அஹமட், சிறந்த துடுப்பாட்ட வீரராக றஹிமியா அணியின் றஜா ஆகியோர் தெரிவாகினர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
