இலங்கையில் நாளை மருத்துவர்கள் போராட்டம்: சிக்கலில் சுகாதாரத்துறை - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
இலங்கையில் நாளை மருத்துவர்கள் போராட்டம்: சிக்கலில் சுகாதாரத்துறை  லங்காசிறி நியூஸ்

இலங்கையில் மருத்துவர்கள் நாளை நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளனர்.இலங்கை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், நாளை நாடு தழுவிய 48 மணி நேர அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது. மருத்துவர்களின் இந்த போராட்டம் நாளை(23/01/2026) வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு இந்த போராட்டம் தொடங்கும் என அறிவித்துள்ளனர். இலவச சுகாதார சேவை மற்றும் மருத்துவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக அரசு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதை குறிப்பிட்டு இந்த போராட்டமானது முன்னெடுக்கப்படவுள்ளது. அதே சமயம் சிறுவர் மருத்துவமனைகள், புற்றுநோய் மருத்துவமனைகள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மூலக்கதை