திருகோணமலை- கொழும்பு இரவு நேர ரயில் சேவை தொடக்கம்: முன்வைக்கப்படும் கோரிக்கை - லங்காசிறி நியூஸ்
கொழும்பு- திருகோணமலைக்கான இரவு நேர ரயில் சேவை நீண்ட காலமாக தடைப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அறிவிப்பின் படி, ரயில் சேவையானது 20/01/2026 இரவு திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டது. கொழும்பு- திருகோணமலைக்கான இரவு நேர ரயில் சேவை கடந்த ஓரிரு மாதங்களாக தடைப்பட்டு இருந்ததை அடுத்து, தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு இருப்பது பொதுமக்களுக்கான போக்குவரத்து சேவை சுலபமாக்கியுள்ளது. அரசு அதிகாரிகள் கொழும்பு நோக்கி தங்கள் கடமை நிமித்தம் ஆசனப் பதிவுகளை மேற்கொண்டு அதிகமாக இரவு நேர சேவையில் ஈடுபடுகின்றனர். அதைப்போல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் பொறுத்து ரயில் சேவை அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் தம்பலகாமம் பிரதேச சபைக்குட்பட்ட பல ரயில் பாதைகளில் இரவு நேர தெரு மின் விளக்குகள் இல்லாதது விபத்து ஏற்பட காரணமாக அமையலாம்.எனவே இது தொடர்பாக தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளருக்கு பல முறை தெரியப்படுத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.ஆகவே இரவு நேர ரயில் சேவையை தொடங்கும் போது ரயில்கள் கடந்து செல்லும் சாலை பகுதிகளில் மின் விளக்குகள் இருப்பதை தாமதமின்றி செயல்படுத்துமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
