25ம் ஆண்டு பொங்கு தமிழ் பிரகடன நினைவேந்தல்: யாழ். பல்கலைக்கழகத்தில் எழுச்சி நிகழ்வு - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
25ம் ஆண்டு பொங்கு தமிழ் பிரகடன நினைவேந்தல்: யாழ். பல்கலைக்கழகத்தில் எழுச்சி நிகழ்வு  லங்காசிறி நியூஸ்

இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25ம் ஆண்டு நினைவேந்தல் நடைபெற்றது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட வளாகத்திற்குள் உள்ள பொங்குதமிழ் நினைவுத்தூபி முன் திரண்ட மாணவர் அமைப்பினர், விரிவுரையாளர்கள், மாணவர்கள் என அனைவரும் பொங்குதமிழ் பிரகடன நிறைவு நாளை நினைவு படுத்தியுள்ளனர்.இந்த நிகழ்வின் போது பொங்குதமிழ் பிரகடனம் வாசிக்கப்பட்டது. இந்த எழுச்சி நிகழ்வில், தமிழ் மக்களின் விருப்பங்களான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம் மற்றும் தமிழ் தேசியம் என்பவை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பன பொங்குதமிழ் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை