முதல் இந்திய வீரர்...இன்னும் 26 ரன்கள் - ஷ்ரேயாஸ் ஐயர் நிகழ்த்த இருக்கும் சாதனை
சென்னை,இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. முதல் 2 ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளநிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. அதனை தொடர்ந்து இந்த ஒருநாள் தொடரின் முடிவை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது எதிர்வரும் நாளை இந்தூரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த தொடரை கைப்பற்றும் என்பதால் இந்த இறுதிப்போட்டியில் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கும் துணை கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் போட்டிகளில் ஒரு முக்கியமான சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அவர் 26 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் ஒருநாள் போட்டிகளில் 3,000 ரன்களை பூர்த்தி செய்வார். இதன் மூலம் அதிவேகமாக 3,000 ரன்களை பூர்த்தி செய்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்துவார். ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணிக்காக கடந்த 2017 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 69 இன்னிங்ஸ்களில் 5 சதம் மற்றும் 23 அரைசதம் என 2974 ரன்களை குவித்துள்ளார். 1.ஷிகர் தவான்: 72 இன்னிங்ஸ்கள் 2. விராட் கோலி: 75 இன்னிங்ஸ்கள் 3. கே.எல். ராகுல்: 78 இன்னிங்ஸ்கள்




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
