ரன் ஓட மறுத்த ஸ்மித்...களத்தில் கடுப்பான பாபர் அசாம்
சென்னை,ஆஸ்திரேலியாவில் 2025/26 பிக்பேஷ் டி20 தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் வீரர்களான ஸ்மித் மற்றும் பாபர் அசாம் இடையே நடந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த தொடரில் நேற்று சிட்னியில் 37வது போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் மோதின. அதில் தண்டர் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிக்ஸர்ஸ் அணி தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய சிட்னி தண்டர் அணி 187 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் டேவிட் வார்னர் சதமடித்து 110* (65) ரன்களை குவித்தார். அடுத்து விளையாடிய சிக்ஸர்ஸ் அணி 17.2 ஓவரில் 191/5 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 100 (42), பாபர் அசாம் 47 (39) ரன்கள் விளாசி வெற்றியில் பங்காற்றினார்கள். இப்போட்டியின் 11வது ஓவரின் கடைசி பந்தில் சிங்கிள் எடுக்க முயன்ற பாபரின் அழைப்பை ஸ்மித் தவிர்த்தார். இதனால், பாபர் சிறிது கடுப்பானார். ஆனால், அடுத்த ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு ஸ்மித் 32 ரன்களை சேர்த்தார். பின்னர் 13வது ஓவரின் முதல் பந்திலேயே பாபர் போல்டானார். இதனால் வெளியேறும் போது, பவுண்டரி லைனை தாக்கி தனது விரக்தியை பாபர் வெளிப்படுத்தினார். இது தற்போது பேசு பொருளாகியுள்ளது




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
