சீனா: பள்ளியில் நோரா வைரஸ் பரவல்; 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாதிப்பு
பீஜிங், சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் போஷான் நகரில் உள்ள உயர்நிலை பள்ளி ஒன்றில் படித்து வரும் மாணவர்களில் 100-க்கும் மேற்பட்டோருக்கு நோரா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் சீரான நிலையில் உள்ளனர். பெரிய அளவில் பாதிப்பு இல்லை என தகவல் தெரிவிக்கின்றது. இதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுகாதார கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சீனாவில் பொதுவாக அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் இந்த தொற்று பரவல் அதிகரித்து காணப்படும். இது அதிக தொற்றும் தன்மை கொண்டதுடன், உலகளவில் சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்த கூடியது. ஆண்டுதோறும் கோடிக்கணக்கானோர் இதனால் பாதிக்கப்படுகின்றனர். கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை இது ஏற்படுத்தும். 5 வயதுக்குட்பட்ட 20 கோடி குழந்தைகள் உள்பட 68.5 கோடி பேருக்கு ஆண்டுதோறும் பாதிப்பு ஏற்படுகிறது என தகவல் தெரிவிக்கின்றது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
