அமெரிக்காவுக்கு கிரீன்லாந்து வேண்டும்; எதிர்க்கும் நாடுகளுக்கு வரி விதிப்போம்: டிரம்ப் மிரட்டல்
வாஷிங்டன் டி.சி., அமெரிக்காவில் மீண்டும் பொற்காலம் உருவாவதற்கான பணிகளை செய்வேன் என உறுதியேற்று செயலாற்றி வரும் ஜனாதிபதி டிரம்ப், அதற்காக பிற நாடுகளின் மீது கடுமையான வரிகளை விதித்து உத்தரவிட்டார். இதனால், அமெரிக்க கஜானாவுக்கு நிறைய டாலர்கள் வந்து குவியும் என கணக்கு போடுகிறார். சமீபத்தில், உலக அளவில் பெரிய எண்ணெய் இருப்பு கொண்ட வெனிசுலாவின் அதிபரை கைது செய்து, அமெரிக்காவுக்கு நாடு கடத்தினார். உலக நாடுகளை அதிர செய்த இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக கொலம்பியாவை கைப்பற்ற முயற்சிப்பார் என முதலில் தகவல் வெளியானது. ஆனால், கிரீன்லாந்து தனக்கு வேண்டும் என டிரம்ப் கூறி வருகிறார். இதற்கு பிற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஆர்க்டிக் பெருங்கடலில் பலத்துடன் உள்ள ரஷியா மற்றும் சீனா நாடுகளிடம் இருந்து அமெரிக்காவை பாதுகாக்க கிரீன்லாந்து எங்களுக்கு அவசியம் என கூறினார். அதனால், சுயாட்சி பிராந்திய பகுதியை எங்களிடம் விற்க வேண்டும் என டிரம்ப் தொடர்ந்து டென்மார்க்கை வலியுறுத்தி வருகிறார். ஆனால், டென்மார்க்கோ அல்லது நேட்டோ நாடுகளோ இதற்கு சம்மதிக்கவில்லை. கிரீன்லாந்தின் பாதுகாப்பை வலுப்படுத்த பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் தங்களுடைய படைகளை அனுப்பி வருகின்றன. ஆனால், தங்களுடைய பாதுகாப்பிற்காக கிரீன்லாந்து தேவை என வலியுறுத்தி வரும் டிரம்ப், அதற்காக அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தவும் தயாராக இருக்கும் என கூறினார். சமீபத்தில் வெனிசுலா மற்றும் ஈரானில் நடந்த தாக்குதலை இதற்கு எடுத்துக்காட்டாக குறிப்பிட்டார். அமெரிக்காவின் பாதுகாப்புக்கு கிரீன்லாந்து வேண்டும். இதனை எதிர்க்கும் நாடுகளுக்கு நான் வரி விதிப்பேன் என டிரம்ப் மிரட்டலாக கூறியுள்ளார்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
