முதல் வாரத்தில் ரூ.238 கோடி வசூலித்த பிரபாஸின் “தி ராஜா சாப்”

  தினத்தந்தி
முதல் வாரத்தில் ரூ.238 கோடி வசூலித்த பிரபாஸின் “தி ராஜா சாப்”

பான் இந்தியா நட்சத்திரம் பிரபாஸ் நடிப்பில் கடந்த 9ந் தேதி வெளியான படம் ‘தி ராஜாசாப்’. பீப்பிள் மீடியா பேக்டரி தயாரிப்பில் மாருதி இயக்கிய இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாகவும், சஞ்சய் தத், போமன் இரானி, ஜரினா வஹாப் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 9ம் தேதி வெளியானது. இந்த படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர், ‘ராஜா சாப்’ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளில் 1சதவீதம் பூர்த்தி செய்யத் தவறினாலும் கேள்வி கேட்கலாம் என்று சவால் விட்டிருந்தார். பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் முதல் வாரத்தில் ரூ.238 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிரஞ்சீவியின் படத்திற்கான வரவேற்பினால் இப்படத்தின் வசூல் குறைந்ததாகக் கூறப்படுகிறது.The KING SIZE BLOCKBUSTER marches on with unprecedented love ❤️‍#TheRajaSaab collects 238 Cr+ Worldwide Gross in its First Week and going super strong at every centre #BlockbusterTheRajaSaab #Prabhas @directormaruthi @musicthaman @peoplemediafcy @rajasaabmovie pic.twitter.com/lJu4V95f5G

மூலக்கதை