அஜித்தை துபாய் ரேஸிங் களத்தில் சந்தித்த பிரபல நடிகர்கள்

  தினத்தந்தி
அஜித்தை துபாய் ரேஸிங் களத்தில் சந்தித்த பிரபல நடிகர்கள்

நடிகர் அஜித்குமார், ‘குட்​பேட் அக்​லி’ படத்தை அடுத்து ஆதிக் ரவிச்​சந்​திரன் இயக்​கும் படத்​தில் மீண்​டும் நடிக்க இருக்​கிறார். இப்படம் பற்​றிய அறி​விப்பு இம்​மாத இறு​தி​யில் வெளி​யாகும் என்று கூறப்​படுகிறது. இதற்​கிடையே கார் பந்​த​யத்​தி​லும் கவனம் செலுத்தி வரு​கிறார் அஜித். கடந்த ஆண்​டு, அபுதாபி, பார்​சிலோ​னா, மலேசியா உள்பட பல்​வேறு நாடு​களில் நடந்த கார் பந்தய போட்​டிகளில் தனது அணி​யினருடன் கலந்து கொண்ட அவர் இப்​போது, 24 ஹெச் சீரிஸ்- மத்​திய கிழக்கு டிராபிக்​கான பந்​த​யத்​தில் கலந்​து​கொண்​டிருக்​கிறார். இந்நிலையில், அஜித்தை துபாய் ரேஸிங் களத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், சிபிராஜ் ஆகியோர் சந்தித்துள்ளனர்.It was a real pleasure to meet #Ajithkumar sir at the #24HDubai racing event today. Was truly impressed by all the effort and hard work he has put into pursuing his passion. As always it was wonderful conversing and spending quality time with you dear sir.Thanks for the… pic.twitter.com/BC32RF7UGvஅஜித்தின் ‘ரேஸிங்’ பயணத்தை மையமாக வைத்து இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கும் ஆவணப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. pic.twitter.com/rZv0FR1TE6

மூலக்கதை