வங்காளதேசம்: பெட்ரோலுக்கு காசு கேட்ட இந்து ஊழியர் கொடூர கொலை
டாக்கா, வங்காளதேசத்தில் மாணவர் போராட்டம் தொடர்ச்சியாக, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார். இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார். இந்த நிலையில், பேராசிரியர் யூனூஸ் தலைமையிலான இடைக்கால அரசில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதல் கடந்த டிசம்பர் மத்தியில் அதிகரிக்க தொடங்கியது. இதற்கு இந்தியா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனினும், கும்பல் தாக்குதல் குறையாமல் தொடர்ந்து வருகிறது. இதில், மருந்து கடை உரிமையாளர், தொழிலதிபர்கள், ஆலை பணியாளர், வாலிபர்கள் என இந்துக்கள் இலக்காக கொள்ளப்பட்டனர். பலர் கொடூர கொலை செய்யப்பட்டனர். இந்த நிலையில், ராஜ்பாரி மாவட்டத்தில் கோவாலேண்டா மோர் பகுதியில் கரீம் என்ற பெயர் கொண்ட எரிபொருள் நிலையத்தில் கார் ஒன்று நேற்று அதிகாலை 4.30 மணியளவில் வந்துள்ளது. அதில் இருந்தவர்கள் பெட்ரோல் போட்டு விட்டு காசு தராமல் செல்ல முயன்றனர். ஏறக்குறைய ரூ.3 ஆயிரம் வரை பணம் கொடுக்காமல் தப்ப முயன்றனர். இதனால், ஊழியர் ரிபோன் சஹா (வயது 30) என்ற இந்து வாலிபர் காரை மறித்து, பணம் கொடுத்து விட்டு செல்லுங்கள் என கூறியுள்ளார். ஆனால், அவர்கள் காரை அவர் மீது ஏற்றி, கொலை செய்து விட்டு தப்பினர். இந்த சம்பவத்தில் அவர் படுகாயமடைந்து பலியானார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், சொகுசு கார் உரிமையாளர் அபுல் ஹாசிம் (வயது 55) மற்றும் ஓட்டுநர் கமல் உசைன் (வயது 43) ஆகியோரை கைது செய்து உள்ளனர். ஹாசிம், கான்டிராக்டராக தொழில் செய்து வருகிறார். வங்காளதேச தேசியவாத கட்சியின் முன்னாள் பொருளாளராகவும், ஜுபோ தல் மாவட்ட முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
